ஜமாபந்தி : ஸ்ரீரங்கம், தொட்டியத்தில் 82 மனுக்களுக்கு உடனடித் தீர்வு

திருச்சி மாவட்டத்தில் வருவாய்த் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஸ்ரீரங்கம்,

திருச்சி மாவட்டத்தில் வருவாய்த் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஸ்ரீரங்கம், தொட்டியம் வட்டத்தில் 82 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டன.
ஸ்ரீரங்கம் வட்டாட்சியரகத்தில் சார் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஜமாபந்தி தொடங்கியது. அந்தநல்லூர் பகுதிக்குள்பட்ட  பேட்டைவாய்த்தலை, சிறுகமணி, பெருகமணி, திருப்பராய்த்துறை, கொடியாலம் உள்பட11 கிராமங்களைச் சேர்ந்த 81 பேர் மனுக்கள் அளித்தனர். இதில் 17 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு, அதற்கான ஆணையை சார் ஆட்சியர் வழங்கினர்.  மீதமுள்ள 64 மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
புதன்கிழமை குழுமணி பகுதிக்கும், வியாழக்கிழமை சோமரசம்பேட்டை பகுதிக்கும், ஜூன் 14- இல் மணிகண்டம், ஜூன் 18-இல் ஸ்ரீரங்கம் வட்டாரப் பகுதிக்கும் ஜமாபந்தி நடைபெறும்.  ஜமாபந்தி தொடக்க நிகழ்வில், வட்டாட்சியர் என். கனகமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொட்டியத்தில் :  தொட்டியம் வட்டாட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஜமாபந்திக்குத் தலைமை வகித்து, ஏளூர்ப்பட்டிக்கு வருவாய்க் கிராமங்களுக்குள்பட்ட  பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.
மொத்தம் பெறப்பட்ட 501 மனுக்களில் 65-க்கு உடனடித் தீர்வு காணப்பட்டு, அதற்கான ஆணையை ஆட்சியர் சிவராசு வழங்கினார். 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 422 மனுக்கள் துறை சார்ந்த அலுவலர்களின் விசாரணைக்கு அனுப்பப்பட்டன. வட்டாட்சியர் பன்னீர்செல்வம், தனி வட்டாட்சியர் செந்தில்குமார் (தேர்தல்பிரிவு),  மண்டலத் துணை  வட்டாட்சியர் ஆர்.தங்கவேல், நில அளவைத்துறை உதவி இயக்குனர் முரளிதாஸ் உள்ளிட்டோர் ஜமாபந்தி தொடக்க நிகழ்வில் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com