சுடச்சுட

  

  திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 15 ஆம் தேதி சமையல் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் சு.சிவராசு புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  மாவட்ட வருவாய் அலுவலர் த.சாந்தி தலைமையில் திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், திருவெறும்பூர் வட்டாரத்துக்கு உள்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே, திருவெறும்பூர் வட்டாரத்துக்கு உள்பட்ட நுகர்வோர்கள்,அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள்,பொதுமக்கள் கலந்து கொண்டு எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைபாடுகளை மனுக்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai