சுடச்சுட

  

  திருச்சி மாவட்டத்தின் 11 வட்டங்களில்,  ஜூன் 14 ஆம் தேதி அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
  வருவாய்த்துறை அலுவலர்கள் வாரத்தில் ஒரு நாள் ஒரு கிராமத்தில் முகாமிட்டு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், வீட்டுமனைப் பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு- இறப்புச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ்,  இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று தீர்வு காண அம்மா திட்டம் முகாமில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  அதன்படி வரும் 14 ஆம் தேதி அம்மா திட்ட முகாம் நடைபெறும்  வட்டம்- கிராமம் என்ற அடிப்படையில் விவரம்:
  திருச்சி மேற்கு- உய்யக்கொண்டான்திருமலை, திருச்சி கிழக்கு- உக்கடை அரியமங்கலம், திருவெறும்பூர்- குண்டூர்,  ஸ்ரீரங்கம்- மருதாண்டாக்குறிச்சி, மணப்பாறை- பொய்கைப்பட்டி,  மருங்காபுரி- செவல்பட்டி, லால்குடி- வந்தலைக்கூடலூர், மண்ணச்சநல்லூர்- தத்தமங்கலம்,  முசிறி- வாளசிராமணி, துறையூர் - சிறுநாவலூர், தொட்டியம்- தொட்டியம். சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai