பி.எஸ்.என்.எல் செல்லிடப்பேசி கோபுரத்தின் மின் இணைப்பு துண்டிப்பு; சேவை பாதிக்கும் அபாயம்
By DIN | Published on : 13th June 2019 09:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மின் கட்டணம் செலுத்தாத காரணத்தால், பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி கோபுரங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மணப்பாறை வட்ட பி.எஸ்.என்.எல் நிறுவனம் 14 கோபுரங்களை அமைத்து வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் வழங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் மின் வாரியத்திற்கு முறையாக மின் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை தொப்பம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல் செல்பேசி கோபுரத்திற்கான மின் இணைப்பு ரூ. 22 ஆயிரம் மின் கட்டணம் செலுத்தாத காரணத்தால் மின் வாரியத்தால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு தொலைதொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாம். இதுதவிர, வையம்பட்டி உபகோட்ட மின் வாரியத்திற்கு ரூபாய் இரண்டரை லட்சமும், துவரங்குறிச்சி உபகோட்ட மின் வாரியத்திற்கு நான்கரை லட்சமும் மின் கட்டண நிலுவை உள்ளதெனத் தெரிகிறது.