சுடச்சுட

  

   

  திருச்சி அருகே தாராநல்லூரில் உள்ள அருள்மிகு செல்லாயி அம்மன் திருக்கோயில் தேர்த்திருவிழா புதன்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
  இக்கோயிலில் ஸ்ரீ கொத்தளத்து அலங்கமாமுனீஸ்வரர், ஸ்ரீமாகாளியப்பர், ஸ்ரீசந்தனகருப்பு, ஸ்ரீபொம்மியம்மா என பல்வேறு பரிவார தெய்வங்களும் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயில் தேர்த்திருவிழா புதன்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் தொடக்கமாக ஏராளமான பெண்கள் அம்மா மண்டபத்திலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும்  சிறப்பு அபிஷேகமும்,விசேஷ தீபாராதனைகளும் நடந்தன.
  விழாவின் தொடர்ச்சியாக ஜூன் 18ஆம் தேதி அம்மனுக்கு மறுகாப்புக் கட்டி மந்தைக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவினை முன்னிட்டு தினசரி இரவு அம்மன் வெவ்வேறு வாகனங்களில் திருவீதியுலா வரவுள்ளார். ஜூன் 25 ஆம் தேதி எல்லை ஓட்டமும், மறுநாள் சப்பரம் புறப்பட்டு சுத்தபூஜையும் நடைபெறுகிறது. 27 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஜூன் 30 ஆம் தேதி அம்மன் கோயிலுக்கு குடிபுகுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai