குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்: உறுதிமொழியேற்பு

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும்

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும், மாநகராட்சி ஊழியர்களின் உறுதிமொழியேற்கும் நிகழ்வும் புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஜங்ஷன் ரயில்நிலையம் அருகே நடைபெற்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்து ஆட்சியர் சு. சிவராசு கூறியது: அரசியலமைப்பு விதிகளின்படி குழந்தைகள் கல்வி பெறுவது அடிப்படை உரிமையாகும். எனவே, 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை பணிக்கு அனுப்பக் கூடாது. திருச்சி மாவட்டத்தை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவருத்ரய்யா, தொழிலாளர் துறை இணை ஆணையர் டி. தர்மசீலன், திருச்சி மேற்கு வட்டாட்சியர் ராஜவேல், தேர்தல் தனி வட்டாட்சியர் முத்துசாமி, தொழிலாளர் துறை உதவி ஆணையர் சதீஷ்குமார், தேசிய குழந்தைத் தொழிலாளர் சீரமைப்பு திட்ட இயக்குநர் பெர்லீனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டனர்.
உறுதிமொழியேற்பு: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதவி ஆணையர் டி.எஸ். துரைமுருகன் தலைமையில், மாநகராட்சி மைய அலுவலக அலுவலர்கள் மட்டுமல்லாது 4 கோட்டங்களிலும் பணிபுரியும் பணியாளர்கள், ஊழியர்கள், உதவியாளர்கள் என அனைவரும் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழியேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com