பம்ப் செட் அமைக்க  50 சதவீதம் மானியம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் குழாய்கிணறு, பம்ப்செட், நீர்ப்பாசன குழாய், தரை நிலை

திருச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் குழாய்கிணறு, பம்ப்செட், நீர்ப்பாசன குழாய், தரை நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு;  திருச்சி மாவட்டத்தில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம்  மத்திய மாநில அரசு திட்டத்தின் கீழ் துணைநிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டம் இந்நிதியாண்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் குழாய்க்கிணறு மற்றும்  துளைக்கிணறு அமைக்கவும், டீசல் பம்ப் செட், மின் மோட்டார் பம்ப் செட் நிறுவுவதற்கும், பாசனக்குழாய் அமைக்கவும் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், அன்பில், கல்லக்குடி, லால்குடி, புள்ளம்பாடி ,வாளாடி, வளநாடு, சிறுகாம்பூர், ஆமுர் , அந்தநல்லூர், குழுமணி, சோமரசம்பேட்டை, ஸ்ரீரங்கம், நவல்பட்டு, திருவெறும்பூர்,வேங்கூர்,திருச்சி வடக்கு மற்றும் தெற்கு ஆகிய குறு வட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறலாம்.
மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் வயல்களில் 1.10.2018 முதல் நுண்ணீர் பாசன அமைப்புகளான சொட்டு நீர், தெளிப்பு நீர், மழைநீர், தெளிப்பான் போன்ற அமைப்புகளையும் கட்டாயம் நிறுவிட வேண்டும்.அதற்கு விவசாயிகள் தங்கள் வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி நுண்ணீர் பாசன அமைப்பினை தங்கள் வயல்களில் நிறுவுவதற்கு விவசாயிகள் தங்களது பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். இதனையடுத்து வேளாண்மை இணை இயக்குநர் அலுவல வளாகத்தில் முதல் தளத்தில் இயங்கும் நிர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (0431-2420244) தொடர்பு கொண்டு இப்பணிகளை மேற்கொள்வதற்கான பணி ஆணை பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com