பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

திருச்சி ஜெயந்திரா மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை தீ தடுப்பு ஒத்திகைப் பயிற்சி  நடைபெற்றது.

திருச்சி ஜெயந்திரா மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை தீ தடுப்பு ஒத்திகைப் பயிற்சி  நடைபெற்றது.
 தீயணைப்புத்துறையின் திருச்சி மாவட்ட உதவிக் கோட்ட அலுவலர்  சு.கருணாகரன் தலைமையில் நிலைய அலுவலர் செ.லியோ ஜோசப் முன்னிலையில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் திருச்சி ஜெயந்திரா மேல்நிலைப்பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகைப் பயிற்சியை செய்து காட்டினர்.
ஒத்திகையின் போது மாடிக் கட்டடத்தில் இருக்கும் பாதிக்கப்பட்டவரை பத்திரமாக மீட்பது, மாடிக் கட்டடங்களில் ஏற்படும் தீ விபத்தை மேலும் பரவாமல் தடுப்பது, பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது என்பன போன்றவற்றை தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர்.  தீயணைப்புத்துறையினர் பயன்படுத்தும் அவசர கால ஆம்புலன்ஸ், நுரை மூலம் தீயை அணைக்கும் வாகனம், தீ தடுப்பு விழிப்புணர்வுப் பேருந்து ஆகியன குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு காண்பித்து அவற்றின் செயல்பாடு குறித்தும் விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com