சாலையோரத்தில் இளைஞர் சடலம்
By DIN | Published On : 22nd June 2019 08:56 AM | Last Updated : 22nd June 2019 08:56 AM | அ+அ அ- |

துறையூர் அருகே சாலையோரத்தில் இறந்த நிலையில் கிடந்த கொத்தனார் சடலம் மீட்கப்பட்டது.
துறையூர் அருகிலுள்ள மருவத்தூரைச் சேர்ந்தவர் கொத்தனார் பெரியசாமி (30). இவருக்கும், இவரது மனைவி ரஞ்சிதாவுக்கும் இடையே வியாழக்கிழமை குடும்பத் தகராறு ஏற்பட்டதாம்.
இதைத் தொடர்ந்து துறையூர் சென்று பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கிய பெரியசாமி, கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் குடித்து மயங்கி விழுந்து சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த துறையூர் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.