நடுஆற்றில் ஓடிய காவிரி நீரை கரைக்கு திருப்பிவிட்ட காங்கிரஸ் கட்சியினர்
By DIN | Published On : 23rd June 2019 04:07 AM | Last Updated : 23rd June 2019 04:07 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் நடு ஆற்றில் ஓடிய காவிரி நீரை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை கரையோரம் திருப்பினர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அம்மாமண்டபம் பகுதியிலுள்ள காவிரியாற்றில் திதி கொடுப்பதற்காக ஏராளமானோர் தினமும் வருகின்றனர். இவர்கள் திதி கொடுத்த பின்னர் நீராடுவதற்காக தண்ணீர் இருக்கும் ஆற்றின் நடுபகுதிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லையாம். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் எம்.சரவணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர்,ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு ஆற்றின் நடுவில் ஓடிய காவிரி நீரை கரையோரம் திருப்பிவிட்டனர். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட த்தலைவர் வி.ஜவஹர்,கோட்டத்தலைவர் சிவாஜி சண்முகம், செல்விகுமரன், தியாகராஜன்,செந்தில்நாதன்,கோபால் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.