திருநெடுங்களம் கோயிலில் அதிமுக சிறப்பு யாகம்
By DIN | Published On : 24th June 2019 09:18 AM | Last Updated : 24th June 2019 09:18 AM | அ+அ அ- |

திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மழை வேண்டி, திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் சனிக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் மழை வேண்டி அதிமுக சார்பில் சிறப்பு யாகம் நடத்த அதிமுக தலைமை உத்தரவிட்டிருந்தது.அதன்படி, திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருவெறும்பூர் வட்டம், திருநெடுங்களம் அருள்மிகு திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் சனிக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகத்துக்கு திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ரத்தினவேல் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வராஜ், பரமேசுவரி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அவைத் தலைவர் பிரின்ஸ் எம்.தங்கவேல், முன்னாள் அமைச்சர் பூனாட்சி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் த. இந்திராகாந்தி, ஒன்றியச் செயலர்கள் ராவணன், நடேசன், சேனை செல்வம், பாலுமணி, ஜெயகுமார், எஸ்.பி.பாண்டியன், ராமமூர்த்தி, வெங்கடாசலம் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர்கழக நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள் சிறப்பு யாக நிகழ்வில் பங்கேற்றனர்.