மழை வேண்டி ஸ்ரீரங்கம் கோயிலில் அகண்ட பாராயணம்
By DIN | Published On : 24th June 2019 09:19 AM | Last Updated : 24th June 2019 09:19 AM | அ+அ அ- |

மழை வேண்டி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் அகண்ட பாராயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்திலுள்ள கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீரங்கம் கோயிலின் கருடாழ்வார் சன்னதியில், கோயில் அர்ச்சகர்கள் சுந்தர் பட்டர்,முரளி பட்டர் தலைமையில் மழை வேண்டி ஆழிமழைக்கண்ணா எனும் அகண்ட பாராயணம் நடைபெற்றது.
இதில் 150-க்கும் மேற்பட்ட அரங்கனடியார்கள் பங்கேற்று பாராயணம் படித்தனர்.காலை 9.30 மணிக்கு தொடங்கிய பாராயணம் ஒரு மணி நேரம் நடைபெற்றது.