வெண்புள்ளிகள் குறித்த அறிவியல் உண்மைகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட வேண்டும்

போலியோ நோய் அறிவிப்பு போல, வெண்புள்ளிகள் குறித்த அறிவியல் உண்மைகளை மத்திய, மாநில அரசுகளை

போலியோ நோய் அறிவிப்பு போல, வெண்புள்ளிகள் குறித்த அறிவியல் உண்மைகளை மத்திய, மாநில அரசுகளை வெளியிட வேண்டும் என்று  வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சி தூய வளனார் கல்லூரியில் இந்த இயக்கத்தின் சார்பில், தேசிய மாநாடு மற்றும் வெண்புள்ளி உள்ளோருக்கான சுயம்வரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வெண்புள்ளிகள் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் குத்துவிளகேற்றி மாநாட்டைத் தொடக்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கச் செயலர் உமாபதி செய்தியாளர்களிடம்கூறியது:
வெண்புள்ளி உள்ளவர்களை வெண்குஷ்டம் என்று சொல்லக்கூடாதவாறு அரசாணை பெற்றிருக்கிறோம்.  எனவே அவ்வாறு வெண்புள்ளிகள் உள்ளோரை அழைக்கவோ அவர்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கவோ கூடாது.
இந்நோய் சத்துக்குறைபாடு காரணமாக ஏற்படும் நோய். தொற்று நோய் அல்ல, உயிர்கொல்லி நோயும் அல்ல என்பன குறித்த அறிவியல் உண்மைககளை மத்திய,மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். 
அதன் மூலம் லட்சக்கணக்கானோர் மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும். மேலும்  வெண்புள்ளிகள் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறவும் வழிவகை செய்ய வேண்டும். மேலும் வெண்புள்ளி உள்ளவர்களை இந்திய ராணுவத்தில் சேர்ப்பதில்லை  என்ற குறைபாடு நிலவுகிறது. எனவே இனிவரும் காலங்களிலாவது ராணுபப்பணிகளில்  சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார் அவர்.
மாநாட்டில்  பல்வேறு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று, வெண்புள்ளி மற்றும் அவை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கிப் பேசினர். 
தொடர்ந்து வெண்புள்ளிகள் பாதிப்புக்குள்ளானோருக்கான சுயம்வரம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று தங்களது வரன்களை தேர்வு செய்தனர்.  நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com