கார் மோதி மூதாட்டி பலி
By DIN | Published On : 25th June 2019 08:30 AM | Last Updated : 25th June 2019 08:30 AM | அ+அ அ- |

வையம்பட்டி அருகே கார் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
வையம்பட்டி ஒன்றியம், ஆர்.எஸ்.வையம்பட்டியைச் சேர்ந்த ராஜகோபால் மனைவி முத்துக்கண்ணு (65). திங்கள்கிழமை காலை வையம்பட்டியிலுள்ள வங்கிக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்புவதற்காக திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற கார் முத்துக்கண்ணு மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்த தகவலறிந்த வையம்பட்டி போலீஸார் முத்துக்கண்ணுவின் சடலத்தை கைப்பற்றினர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியில் பிடிக்கப்பட்டது. வையம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.