ஸ்ரீரங்கம் கோயிலில் ஜூலை 14-இல் ஜேஷ்டாபிஷேகம்
By DIN | Published On : 25th June 2019 08:33 AM | Last Updated : 25th June 2019 08:33 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஜூலை 14-ஆம் தேதி ஜேஷ்டாபிஷேகம் நடைபெறஉள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நம்பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டில் ஜூலை 14 ஆம் தேதி இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இதற்காக அன்று காலை 6 மணிக்கு கருடாழ்வார் சன்னதியிலிருந்து தங்கக்குடம் எடுத்து புறப்பாடாகி, திருக்காவிரியிலிருந்து திருமஞ்சனம் எடுக்கப்பட்டு யானை ஆண்டாள் மீது வைத்து, கொண்டு வரப்படும்.
தொடர்ந்து பெரிய சன்னதியில் வைத்து நம்பெருமாளின் அங்கில்கள் சுத்தம் செய்தல், திரும்ப ஒப்படைத்தல் நிகழ்வுக்குப் பின்னர், நிறைவில் மங்களஹாரத்தி நடைபெறும். ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி, ஜூலை 14 ஆம் தேதி கருவறை சேவை கிடையாது என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.