சுடச்சுட

  

  திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நூறு நாள் வேலை கேட்டும், ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
  ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலையை தொடர்ச்சியாக வழங்கிட வேண்டும், சட்டக்கூலி ரூ.229-ஐ குறையாமல் வழங்கவும், வார முறையில் கூலி கிடைத்திடவும், மணப்பாறை பகுதியை வறட்சிப்பகுதியாக அறிவித்து வறட்சி நிவாரணம் வழங்கிட வேண்டும், முறையான குடிநீர் விநியோகம், ஆழ்துளை கிணறுகளை தூர்வார வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
  அதேபோல மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சங்கச் செயலர் முருகேசன் தலைமையிலும், வையம்பட்டியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
  முசிறியில்.. திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்றிய ஆணையரிடம் தங்களது கோரிக்கை மனுவை வழங்கினர். 
  துறையூரில்...  விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜெ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அனைத்திந்திய மாதர் சங்க மாவட்டத் தலைவி பி. லிங்காராணி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காசிராஜன், ஆனந்தன், உள்ளிட்டோர்பேசினர். நிறைவில் துறையூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமியிடம்  மனு அளித்தனர். 
  உப்பிலியபுரத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் வி.கணேசன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரனிடம் மனு அளித்தனர். 
  விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, ஒன்றியக்குழு பாலசுப்ரமணியன், மாவட்டக்குழு ஆர்.முத்துக்குமார் உள்ளிட்ட பலர் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai