சுடச்சுட

  

  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான பருவத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
  இது குறித்து, பல்கலைக்கழகத் தேர்வு நெறியாளர் க. துரையரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : 
  பாரதிதாசன் இணைவுப் பெற்ற கல்லூரிகளில் இளநிலை மற்றும் இளங்கலைப் பாடப்பிரிவுகளுக்கான, ஏப்ரல்- 2019 ஆம் ஆண்டு பருவமுறைத் தேர்வுத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. 
  அதன் தொடர்ச்சியாக, இளங்கலை தமிழ்,  பயன்பாட்டுத்தமிழ்,  வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல், ஆங்கிலம், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், அரபிக், சமஸ்கிருதம், பொது நிர்வாகவியல்,  சமூகப்பணியியல், சமூகவியல், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மையியல் ஆகிய  படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை,  w‌w‌w.​b‌d‌u.​a​c.‌i‌n என்ற பல்கலைக்கழக இணைய தள முகவரியில்,  பதிவெண்களை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai