சுடச்சுட

  

  திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருப்பூரில், ராஜ கம்பளத்து நாயக்கர் இன மக்கள் வளர்க்கும் எருதுகள் இறந்த பின்பு அவற்றை எருது குட்டை எனப்படும் பகுதியில் புதைப்பது வழக்கம். அந்த இடத்தில் திருவிழா எடுத்து ஸ்ரீ எருது குட்டை சாமி வழிபாடு செய்கின்றனர். 
  இதேபோல் நிகழாண்டு திருவிழா கடந்த 16-ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.  முக்கிய நிகழ்வான கொத்து கம்பு பூ தாண்டும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை கருப்பூர் ஸ்ரீ எருது குட்டை சாமி காட்டுநாயக்கர், சீல் நாயக்கர் மந்தையில் நடைபெற்றது. 
  இந்த எருது ஓட்டத்திற்கு  காட்டு மற்றும் சீல் நாயக்கர், பிட்டம நாயக்கர் உள்ளிட்ட 14 மந்தைகளைச் சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர் இனமக்கள் சுமார் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். நிகழ்வில் அவர்கள் வளர்த்து வரும் எருதுகளை  சுமார் 300 மீட்டர் தொலைவிற்கு அழைத்துச்சென்று அங்கிருந்து வழிபாட்டு தளத்தை நோக்கி ஒரே நேரத்தில் அவிழ்த்துவிடப்பட்டன.  எல்லை வரையறுக்கப்பட்ட பகுதியில் விரிக்கப்பட்டிருக்கும் துண்டை முதலில் ஓடி வந்து தாண்டிச்செல்லும் எருதுமேல் மஞ்சள் பொடி தூவினர். 
  நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில பொதுச்செயலரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான வி. தங்கராஜ், முதல் பரிசு பெற்ற வாலியம்பட்டி எருதுக்கு நினைவு பரிசை வழங்கினார். ஏற்பாடுகளை தொப்பநாயக்கன்பட்டி மந்தை பெரியதனம் என். அப்பண்ணநாயக்கர், கருப்பூர் ஊர் நாயக்கர் வி. சுப்பிரமணி, பி. குமார், வி.சுரேஷ் ஆகியோர் நடத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai