சுடச்சுட

  

  ரயில்வே ஒப்பந்ததாரர்களுக்கு புதிய சங்கக் கட்டடம் திறப்பு

  By DIN  |   Published on : 26th June 2019 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சியில் ரயில்வே ஒப்பந்ததாரர்களுக்கான சங்க கட்டடத்தை தெற்கு ரயில்வே தலைமை நிர்வாக அலுவலர் எல். சுதாகர்ராவ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
  தெற்கு ரயில்வேயில் திருச்சி, மதுரை, சேலம், சென்னை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள ரயில்வே ஒப்பந்ததாரர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தங்களது சங்கத்துக்கு கட்டடம் கட்ட இடவசதி கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம் முதன் முறையாக திருச்சி கோட்டத்தில், மத்திய பேருந்து நிலையம் (தனியார் ஆம்னி பேருந்து நிலையம்) அருகே உள்ள ரயில்வே கட்டுமான பொறியாளர் அலுவலக வளாகத்தில்  ரயில்வே ஒப்பந்ததாரர்கள் சங்கத்துக்கு இடத்தை வழங்கியது. அதில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தை தெற்கு ரயில்வே தலைமை  (கட்டுமானப் பணிகள்) நிர்வாக அலுவலர்  எல். சுதாகர்ராவ் திங்கள்கிழமை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தலைமை பொறியாளர் சுமீத்சிங்கால் (சென்னை),  திருச்சி ரயில்வே கோட்ட துணை தலைமைப் பொறியாளர்கள் ஏ. பூபதி, எம். பிரபாகரன்,  மற்றும் அதிகாரிகள் ஜி.எஸ். சேகர், கே. சூரியநாராயணா,  பி. கண்ணன்,  ரயில்வே ஒப்பந்ததாரர்கள் சங்க மாநில தலைவர்  ஈகிள் சுப்பிரமணியன்,  பொருளாளர் என். வெங்கடாசலம், திருச்சி கோட்ட தலைவர் ஜோசப்லூயிஸ்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
  இறகுபந்து உள் விளையாட்டரங்கம்: முன்னதாக அதே வளாகத்தில், ரயில்வே ஊழியர்களுக்கான இறகுபந்து உள் விளையாட்டரங்கையும் தொடங்கி வைத்தார். ஏற்கெனவே அங்கு இயங்கி வந்த அந்த உள் விளையாட்டரங்கம் ரூ. 15 லட்சத்தில் புனரமைக்கப்பட்டது. புதுப்பொலிவுடன் திகழும் அந்த உள் விளையாட்டரங்கையும் ரயில்வே தொழிலாளர்கள் உபயோகத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.     
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai