சுடச்சுட

  

  34 பேருந்துகளில் இருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
  மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படிஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பி. பிரபாகரன் தலைமையில், மாசுக்கட்டுபாட்டு வாரிய அலுவலர் தமிழ்ச்செல்வி, ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சம்பத்குமார், லால்குடி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சத்தியமூர்த்தி, முசிறி ஆய்வாளர் புஷ்பா,துறையூர் ஆய்வாளர் செல்வக்குமார் ஆகியோர் அனைத்துப் பேருந்துகளையும் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
  2 மணி நேரம் நடத்திய சோதனையில் 20 தனியார் பேருந்துகளிலும், 4 அரசுப் பேருந்துகளிலும்,10 பள்ளி, கல்லூரி பேருந்துகளிலும்  இருந்த அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்து, வாகனங்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
  91 டெசிபல் அளவு ஒலி தான் சரியானது. தற்போது பொருத்தப்பட்டிருந்த ஹாரன்களின் ஒலி அளவு 102 லிருந்து 104 வரை உள்ளது. இதனால் காது கேளாமை ஏற்படும். மேலும் விபத்தும் ஏற்படும் என்றார் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பி. பிரபாகரன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai