8 மாவட்ட அதிகாரிகளுடன் தமிழக டி.ஜி.பி. ஆய்வு

தமிழக  காவல் துறை இயக்குநர் டி.கே. ராஜேந்திரன் 8 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் திருச்சியில் நடந்த

தமிழக  காவல் துறை இயக்குநர் டி.கே. ராஜேந்திரன் 8 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் திருச்சியில் நடந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து ஆய்வும் மேற்கொண்டார். 
திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருச்சி மண்டலத்தில் உள்ள 8 மாவட்ட அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இதில் பங்கேற்க சென்னையிலிருந்து தமிழக காவல்துறை இயக்குநர் டி.கே. ராஜேந்திரன் திருச்சிக்கு வந்தார். கூட்டத்தில், திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி.) வரதராஜூ, துணைத் தலைவர் (டிஐஜி)  லலிதாலட்சுமி, மாநகரக் காவல் ஆணையர் அ. அமல்ராஜ், துணை ஆணையர்கள் என்.எஸ். நிஷா (சட்டம் ஒழுங்கு), ஏ. மயில்வாகனன் (குற்றம் மற்றும் போக்குவரத்து), மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் மற்றும் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு காவல் துறை ஆய்வாளர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்து குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் டிஜிபி மதுரை புறப்பட்டுச் சென்றார்.
குழந்தைகள் போக்குவரத்துப் பூங்காவை சுற்றிப்பார்த்தார் :
ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து,  மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காவிற்கு வந்தார். அங்கு நிர்வாகக் கட்டடத்தையும் பூங்காவையும் சிறிது நேரம் சுற்றிப்பார்த்தார். திருச்சி மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, காவல் ஆணையர் அ. அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com