தையல் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்கள் அளிப்பு
By DIN | Published On : 04th March 2019 08:40 AM | Last Updated : 04th March 2019 08:40 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், பள்ளக்காட்டிலுள்ள இலவச தையல்பள்ளியில் பயிற்சி பெற்றோருக்கு சனிக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திருச்சி கோட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் பள்ளக்காடு கிராமத்தில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தையல்பள்ளி நிர்வாகிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
இதில் இரண்டாவது கட்டமாக தையல் பயிற்சி பயிற்சி பெற்ற 20 பேருக்கு சனிக்கிழமை சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆடிட்டர் மோகன் விழாவில் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். பயிற்சியாளர் மகாலட்சுமிக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்வில், ரோட்டரி சங்கத்தின் திட்டத் தலைவர் கார்த்திகேயன், முன்னாள் தலைவர் சொர்ணகணேஷ், நிர்வாகிகள் வி.நாகராஜ், எஸ்.நாகராஜன், தியாகராஜன், மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.