Enable Javscript for better performance
கவனிப்பாரற்ற நிலையில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள்- Dinamani

சுடச்சுட

    

    கவனிப்பாரற்ற நிலையில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள்

    By DIN  |   Published on : 11th March 2019 03:07 AM  |   அ+அ அ-   |    |  

    திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் கவனிப்பாரற்று காட்சிப் பொருளாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
    ஜங்சன் ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த இயந்திரங்களின் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய  ஊருக்கான பயணத்தொலைவு எவ்வளவு, அதற்கான வரைபடம், நடைமேடை சீட்டு,   பயணிகள் மற்றும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு விவரம் போன்றவற்றை ரயில் நிர்வாகம் வழங்கிய ஸ்மார்ட் கார்டு மூலம் தெரிந்து கொள்ளலாம்.
    மேலும், இந்த கார்டு மூலம் பயணிகள் முன்கூட்டியே தேவைக்கேற்ற தொகையைச் செலுத்தி அவ்வப்போது ரீசார்ஜ் செய்து கொண்டால், இருப்பு விவரமும் அறிய  முடியும். முன்பதிவில்லா மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் ஸ்மார்ட் கார்டு மூலம்   பயணச்சீட்டுகளை பயணிகள் பெறுவதற்காக, திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் இரு தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம்நிறுவப்பட்டு பயன்பாட்டில் இருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவை காட்சிப் பொருளாகத்தான் உள்ளன.
    இதுகுறித்து  பயணி ராமச்சந்திரன் கூறியது: நான் தினமும் ரயிலில் புதுக்கோட்டை சென்று வருவது வழக்கம்.  ஸ்மார்ட் அட்டை பெற்று, அதில் ரூ.500 ரீசார்ஜ் செய்து பயணச்சீட்டு பெற்று பயணித்து வந்தேன். இப்போது இந்த இயந்திரத்தில் அடிக்கடி இணையப்பழுது காரணமாக பயணச்சீட்டை பெற முடியவில்லை. ஆனால், சில நேரங்களில் ஸ்மார்ட் கார்டில் பணம் கழிந்து விடுகிறது.ஆனால் பயணச்சீட்டு வருவதில்லை.இது குறித்து சம்பந்தப்பட்ட பயணச்சீட்டு அலுவலரிடம் கேட்டால், பணம் திரும்ப உங்கள் வங்கிக்கணக்குக்கே வந்து விடும் என்று கூறுகிறார்.ஆனால்  பலமுறை பணம் வரவில்லை. இதனால் ஸ்மார்ட் கார்டு மூலம் பயணச்சீட்டை பெறுவதை நிறுத்திக் கொண்டு,  வரிசையில் காத்திருந்து பயணச்சீட்டு எடுத்து பயணிக்கிறேன் என்றார்.
    தனியார் ஒருவர் ஸ்மார்ட் கார்டில் கமிஷன் தொகை கிடைக்கும் என்பதற்காக அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்து வைத்துக்கொண்டு, பயணச்சீட்டு எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். இப்போது அவர் அதிகம் வருவதில்லை.இணையப் பழுது காரணமாகவும் பயணிகளும் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவதில்லை.மேலும் ஸ்மார்ட் கார்டு மூலம் பயணச்சீட்டு பெறலாம் என்ற விழிப்புணர்வும் மக்களிடம் இல்லாததால் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறைந்திருப்பதாகப் பயணச்சீட்டு அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp