திருவெறும்பூர் பகுதியில் மனைவியிடம் வரதட்சிணைக் கேட்டு கொலை மிரட்டல்விடுத்ததாக அளிக்கப்பட்டபுகாரில், கணவர் உள்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நேரு நகர், மாணிக்கம் காலனியைச் சேர்ந்தவர் துர்கா(30). இவர், திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிவண்ணனை(39) காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆறு மாதம் கழித்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், திருமணத்தின் போது சீர்வரிசையாக அளிக்கப்பட்ட 10 பவுன் நகையை , மணிவண்ணன் மற்றும் அவரது உறவினர்கள் வாங்கிக் கொண்டு, மேலும் ரூ.2 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து துர்கா கொடுத்த புகாரின் பேரில், திருவெறும்பூர் போலீஸார் மணிவண்ணன், அவரது தந்தை செல்வராஜ், உறவினர்கள் உமாமகேஸ்வரி, முரளிதரன், விஜயகுமார் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.