சுடச்சுட

  

  திருச்சியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் ஆட்டோவில் சென்ற முதியவர் உயிரிழந்தார்.
  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள சிறுகுடி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் மு. முத்துவீரன் (62). இவரது மனைவி ஜானகி. இவர்கள் இருவரும் சென்னை சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை திருச்சிக்கு திரும்பினர். அரியமங்கலம் பகுதியில் பேருந்தை விட்டு இறங்கி,  சத்திரம் பேருந்து நிலையம் செல்வதற்காக ஆட்டோவில் சென்றனர். 
  அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சூளைக்கரை மாரியம்மன் கோயில் அருகே  சாலையில் கவிழ்ந்ததில். இந்த விபத்தில் முத்துவீரன் படுகாயமடைந்தார். அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து திருச்சி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு (வடக்கு) போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
  மற்றொரு முதியவர் சாவு: உறையூர் பெரியசெட்டித்தெருவிலிருந்து,  காஜாமொய்தீன் என்பவருக்குச் சொந்தமான ஆட்டோவில் பயணித்த முதியவர் பாலக்கரை பருப்புக்காரத் தெருவுக்கு போகுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து,  ஆட்டோ மரக்கடை அருகே  சென்றபோது முதியவர் திடீரென ஆட்டோவிலேயே மயங்கினார். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai