சுடச்சுட

  

  திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
  நிகழாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாநகரின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்களால் கொண்டு வரப்பட்ட பூத்தட்டுகள் கோயில் உதவி ஆணையர் சு. ஞானசேகரன் தலைமையில் ஊர்வலமாக கோயில் ரத வீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு பூக்களால் சிறப்பு அபிஷேகம், விஷேச தீப ஆராதனை நடந்தது.
  விழாவையொட்டி கோயில் கருவறையும், அர்த்த மண்டபமும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வெக்காளி அம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் அதிகாலை 6 மணி தொடங்கி பூத்தட்டுகளை மாலை 6 மணி வரைகொடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ப. ராணி,கோயில் செயல் அலுவலர் ச. ஞானசகேரன் ஆகியோர் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai