சுடச்சுட

  

  திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள  சப்தரிஷீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம்  வரும் 19 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி 5 ஆம் நாளான  வெள்ளிக்கிழமை  சுவாமி திருவீதி உலா  நடைபெற்றது.
  இக் கோயில் பங்குனித் திருவிழாவின் 9 ஆம் நாள் நடக்கும் தேரோட்டத்துக்கான தேர்க்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இதைத் தொடர்ந்து தினசரி காலை பல்லக்கு புறப்பாடும்,  தினசரி இரவு திருவீதி உலாவும் நடைபெறுகிறது. விழாவின் 5 ஆம் நாளான வெள்ளிக்கிழமை  காலை அருள்மிகு சந்திரசேகரர்,  அம்மனின் பல்லக்கு புறப்பாடும், இரவு  பூச மண்டபத்தில் அபிஷேக ஆராதனையும் நடைபெற்று, சுவாமிகள் தேரோடும் வீதி, உள்வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai