சுடச்சுட

  

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர், பல்வேறு பொதுநல அமைப்புகள் இணைந்து வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப. சின்னத்துரை தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ம.க. கண்ணன், சமூக ஆர்வலர் எம்.ஏ. துரைப்பாண்டியன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த முகிலனை கண்டு பிடித்து தர வேண்டும். பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் உட்பட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
  சமூக நீதிப்பேரவை நிர்வாகி ஏ. ரவிக்குமார்,மக்கள் பாதுகாப்பு மைய நிர்வாகி அ. கமருதீன்,மக்கள் அதிகாரம்  அமைப்பின் நிர்வாகி கென்னடி, தமிழ் தேசிய பேரியக்க நிர்வாகி மு. கவித்துவன்,மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி லெ.செழியன் ஆகியோர் உட்பட பல்வேறு பொதுநல அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
  பெண்கள் முன்னேற்ற இயக்க நிர்வாகி அருள் ஆக்னஸ் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai