சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருச்சியில்  பறக்கும்படையினர் வெள்ளிக்கிழமை நடத்திய  வாகனச் சோதனையில் ரூ. 8,76,80,000 மதிப்பிலான காசோலைகள், புரோநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
  திருச்சி அருகே திருப்பராய்த்துறை சுங்கச்சாவடியில் நில எடுப்பு தனி வட்டாட்சியர் எம். சுமதி தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 
  அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் 192 காசோலைகளில் கையெழுத்துப் போடப்பட்ட 
  ரூ. 8,75,60,000 மதிப்பிலான காசோலைகள் ,ரூ. 1.20 லட்சம் மதிப்பில் இரு புரோநோட்டுகளை கைப்பற்றினர்.
  விசாரணையில் வாகனத்தில் இருந்தோர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் கண்ணன் (29), ராமச்சந்திரன் மகன் மணி (28)மாயாண்டி மகன் பேச்சிமுத்து (20) ஆகியோர் எனத் தெரிய வந்தது. 
  இவர்கள் உரிய ஆவணங்களைக் காண்பிக்காததால் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் கனகமாணிக்கத்திடம் பறக்கும்படை அதிகாரிகள் காசோலைகளை, 
  புரோநோட்டுக்களை ஒப்படைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai