10 வாக்குச் சாவடிகளுக்கு ஒரு மண்டல அலுவலர்:திருச்சி மாவட்டத்தில் 215 பேர் நியமனம்

திருச்சி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்காக 10 வாக்குச் சாவடிகளுக்கு ஒரு மண்டல அலுவலர் என்ற அடிப்படையில் 2

திருச்சி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்காக 10 வாக்குச் சாவடிகளுக்கு ஒரு மண்டல அலுவலர் என்ற அடிப்படையில் 215 மண்டல அலுவலர்கள் வட்டாட்சியர் மற்றும், துணை வட்டாட்சியர் நிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்து ஆட்சியர் சு. சிவராசு பேசியது: திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூர், திருவரங்கம், மணப்பாறை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 9 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதிக்கும் தேர்தல் பணிகளில் ஈடுபட மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள் தனித்தனியே நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவைத் தொகுதியில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கைகளுக்கு தகுந்தபடி 10 முதல் 13 வாக்குச் சாவடிகளுக்கு தலா ஒரு மண்டல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வேளாண்மைத்துறை அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறையினர் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் இந்த பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவைத்தவிர, உதவி மண்டல அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, மண்டல அலுவலர்களும், உதவி மண்டல அலுவலர்களும் வாக்குப்பதிவானது நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com