சுடச்சுட

  


   திருச்சி ஜோசப் கண் மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய அங்கீகாரம் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. 
  திருச்சி ஜோசப்  கண்மருத்துவமனை 1934ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, மிகப்பெரிய கண் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.  இங்கு கண் பரிசோதனை மற்றும் கண் தொடர்புடைய அனைத்து குறைபாடுகளுக்கும்,  நோய்களுக்கும் சிறந்த முறையில் சிகிச்சையும், தீர்வும் வழங்கப்படுகிறது. 
  இந்த மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளாக அறுவைச் சிகிச்சை  செய்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு எந்தவித கிருமி தாக்குதலும் ஏற்படவில்லை. இது என்ஏபிஎச் அங்கீகார நிறுவனம் எதிர்பார்க்கும் ஒரு தரமாகும். தென் தமிழகத்தில் இந்த சான்றிதழ் பெறும் முதல் கண் மருத்துவமனை இதுவாகும். இங்கு ஒரே நேரத்தில் 100 நோயாளிகள் தங்கி சிகிச்சை 
  பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. மேலும் வரும் நோயாளிகளுக்கு தரமான நெறிமுறைகளை பின்பற்றி சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
  மருத்துவமனைகளுக்கான தேசிய அங்கீகார குழு எதிர்பார்ப்பின்படி பார்வை பாதுகாப்பு மற்றும் விழிப்பணர்வு நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் இந்நிறுவனம் நடத்தி வருகிறது. இத்தகவலை மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபாபிரபு, துணை இயக்குநர் பிரதீபா, உதவி இயக்குநர்கள் அகிலன் அருண்குமார், ஆர்த்தி, டாக்டர் கலியமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai