சுடச்சுட

  

  தங்கக் கருட வாகனத்தில் நம்பெருமாள் சேவை: மார்ச் 22-இல் தேரோட்டம்

  By DIN  |   Published on : 17th March 2019 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


   ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் வரும் 23-ஆம் தேதிவரை நடைபெறும் பங்குனித் தேர்த் திருவிழாவின் 4-ஆம் நாளான சனிக்கிழமை முக்கிய நிகழ்வான  தங்கக் கருட சேவை நடைபெற்றது.
  விழாவையொட்டி நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து காலை 7.30-க்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து 9.30-க்கு ரெங்க விலாச மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். மாலை 6.30-க்கு தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்த நம்பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் இரவு 8.30-க்கு வாகன மண்டபத்தை அடைந்த நம்பெருமாள் 9 மணிக்கு புறப்பட்டு 9.30-க்கு கண்ணாடி அறை சென்றடைந்தார். வரும் 22 ஆம் தேதி பங்குனித் தேரோட்டம் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் மற்றும் அற ங்காவலர் குழுவினர் செய்கின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai