சுடச்சுட

  

  துறையூர் அரசு மருத்துவமனையில்  அரசுப் பள்ளி தலைமையாசிரியர் அடித்ததாகக் கூறி மாணவி சிகிச்சை பெறுகிறார். 
  துறையூர் அருகே கோட்டாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் பலராம். வெள்ளிக்கிழமை இவர் வகுப்பில் பாடம் நடத்தியபோது அந்தப் பள்ளியில் படிக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுப்ரமணியன் மகள் சரண்யாவை (10) வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக் கூறி கன்னத்திலும், முதுகிலும் அடித்தாராம்.
  பின்னர் வீட்டுக்கு சென்ற மாணவி பெற்றோரிடம் நடந்ததைத் தெரிவித்த நிலையில்,  இரவில் காது வலிப்பதாகக் கூறியதால் சனிக்கிழமை அவரை துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பான தகவலின்பேரில் துறையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai