சுடச்சுட

  


  விவசாயிகள் மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் விவசாய சங்கங்களின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கும்வகையில் அனைத்து விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை திருச்சியில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார்.
  கூட்டத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, அகில இந்திய மக்கள்சேவை இயக்க விவசாயபிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம், காவரி டெல்டா விவசாயிகள் குழும பொதுச்செயலாளர் சத்யநாராயணன் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கத்தைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர். இதில், மக்களவைத் தேர்தலில் லாபகரமான விலை, விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், மாத ஓய்வூதியம் வழங்கிடவேண்டும், தனிநபர் காப்பீடு வழங்கிடவேண்டும், விளைநிலங்களை பாதுகாக்கவும், நீர் தேக்கத்திற்கு வழிவகுக்கவேண்டும் உள்ளிட்ட விவசாய கோரிக்கைகளை தங்களது தேர்தல் அறிக்கையில் அறிவிக்காத கட்சிகளுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai