அதிமுக பிரமுகர் வீட்டில் மர்மப் பொருள் வெடித்து வீடு சேதம்
By DIN | Published On : 24th March 2019 01:21 AM | Last Updated : 24th March 2019 01:21 AM | அ+அ அ- |

திருச்சி அரியமங்கலத்தில் உள்ள அதிமுக பிரமுகர் வீட்டில் சனிக்கிழமை மர்மப் பொருள் வெடித்ததில் வீடு சேதமடைந்தது.
அரியமங்கலம் அண்ணாநகரை சேர்ந்தவர் கயல்விழி. அதிமுகவைச் சேர்ந்த இவர், 29 ஆவது வார்டு முன்னாள் கவுன்சிலர். அதே பகுதியில் கேபிள் தொழில் செய்து வரும் இவர், தனது மகன்கள் முத்துகுமார், இளவரசன் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சனிக்கிழமை அதிக சப்தத்துடன் மர்மப் பொருள் வெடித்ததில் வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த திருச்சி மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் கயல்விழி வீட்டில் வெடித்த மர்மப் பொருளின் தடயங்களை சேகரித்து ஆய்வு செய்துவருகின்றனர். இதுதொடர்பாக அரியமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.