பேருந்து மோதி மாணவர் காயம்
By DIN | Published On : 24th March 2019 03:01 AM | Last Updated : 24th March 2019 03:01 AM | அ+அ அ- |

துறையூர் அருகே பைக்கில் சென்ற மாணவர் தனியார் கல்லூரிப் பேருந்து மோதி காயமடைந்தார்.
கோட்டப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதாப்சந்திரன் மகன் பிரகாஷ் (16). எரகுடி ஆர்சி ஐடிஐயில் படிக்கிறார். சனிக்கிழமை கோட்டப்பாளையத்தில் பைக்கில் சென்றபோது தனியார் கல்லூரி பேருந்து மோதி படுகாயமடைந்தார். துறையூரிலும், பின்னர் திருச்சி தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநர் சிக்கத்தம்பூர்பாளையம் நா. கந்தசாமியை (58) கைது செய்து விசாரிக்கின்றனர்.