மணப்பாறையில் துணை ராணுவ கொடி அணிவகுப்பு
By DIN | Published On : 24th March 2019 03:04 AM | Last Updated : 24th March 2019 03:04 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் சனிக்கிழமை துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப் படையினர் திருச்சிக்கு வந்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை துவரங்குறிச்சி, புத்தாநத்தம், வையம்பட்டி, மணப்பாறை ஆகிய காவல் பகுதியில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஷர்மு, காவல் ஆய்வாளர்கள் ராமலிங்கம், அனுஷ்காமனோகரி, கோமதி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டி வேலு, அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கவிதா உள்ளிட்ட போலீஸார் மற்றும் 120 துணை ராணுவத்தினர் கலந்துகொண்டனர்.