வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி

திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்காக குலுக்கல் முறையில் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.


திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்காக குலுக்கல் முறையில் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரம் ஆகியவை அந்தந்த வரிசை எண் வாரியாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு உரிய வாக்குச் சாவடிகளை இறுதி செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகத்தில் கணினி மூலம் நடைபெற்ற பணியை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான சு. சிவராசு தொடக்கி வைத்தார். 
மொத்தமுள்ள 9 தொகுதிகளுக்கும் சேர்த்து 3043 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3043 மின்னணு வாக்கு கட்டுப்பாட்டுக் கருவி, 3298 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியை தவிர்த்து வேறு பகுதியில் இந்த இயந்திரங்களை மாற்ற முடியாது. மேலும், குலுக்கல் முறையானது முழுவதுமாக விடியோவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட இயந்திரங்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பாதுகாப்பு அறைகளுக்கு 2 நாளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்படவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com