Enable Javscript for better performance
குண்டர் தடுப்புக் காவலில் ரௌடி கைது- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரௌடி பட்டறை சுரேஷ், குண்டர் தடுப்புக் காவலின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
    திருச்சி பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னைநகர் 8 ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் எஸ். சுரேஷ் என்கிற பட்டறை சுரேஷ் (40). இவர் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால், குண்டர் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் பரிந்துரைத்தார்.
    இதன்பேரில், மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு புதன்கிழமை அதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். இதையடுத்து பட்டறை சுரேஷ் குண்டர் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்யப்பட்டு,  அதற்கான உத்தரவின் நகல் சிறையில் அவரிடம் வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai