Enable Javscript for better performance
கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே வாக்கு- Dinamani

சுடச்சுட

    

    தங்களது கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே வாக்களிப்போம்  என்று  கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
    ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் வாசு தலைமை வகித்தார். 
    இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
    2012 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பூசாரிகள் நலச்சங்கத்தில் இதுவரை 69 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.  நலத்திட்டம் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தும் அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. கிராமக் கோயில்களுக்கு ஒரு கால பூஜைக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும். பூசாரிகள் நலவாரியத்தை  செயல்படுத்த வேண்டும்.
    பூசாரிகள் நலச்சங்கத்தின் கோரிக்கையை ஏற்கும் கட்சிக்கே மக்களவைத் தேர்தலில் பூசாரிகள் நலச்சங்க உறுப்பினர்கள், குடும்பத்தினர் வாக்களிப்பார்கள் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    கூட்டத்தில், மாவட்டத் தலைவர் குழந்தைவேல், மாநிலச் செயலர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai