Enable Javscript for better performance
டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    துறையூர் வட்டாட்சியர்  உத்தரவின் பேரில், கண்ணனூர் வருவாய் ஆய்வாளர் ஜெசிமேரி, வடக்குவெளி கிராம நிர்வாக அலுவலர் பன்னீர்செல்வம், பெத்துப்பட்டி பழனியாண்டி வயலில் சட்ட விரோதமாக அய்யாற்று மணல் சேமிக்கப்பட்டிருக்கிறதா என்பதை பார்க்க செவ்வாய்க்கிழமை அங்கு சென்றனர்.
    அப்போது அவருடைய வயலிலிருந்து மாமுண்டிக்குச் சொந்தமான டிராக்டரில், அதன் ஓட்டுநர் கிளியனூர்பட்டி தனபால் மற்றும் மலையப்பன்  விற்பனை செய்வதற்காக மணலை எடுத்துச் சென்றனராம். அவர்களை விசாரித்துக் கொண்டிருந்த போது, வருவாய் ஆய்வாளரையும், கிராம நிர்வாக அலுவலரையும் மாமுண்டி டிராக்டர் ஏற்றிக் கொல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், ஜெம்புநாதபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து மாமுண்டியை புதன்கிழமை கைது செய்தனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai