Enable Javscript for better performance
திருச்சியில் ரூ.10 கோடி பணம் பதுக்கப்பட்டதாக தகவல்: பறக்கும்படை, வருமானவரித் துறையினர் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    திருச்சியில் ரூ.10 கோடி பணம் பதுக்கப்பட்டதாக தகவல்: பறக்கும்படை, வருமானவரித் துறையினர் சோதனை

    By DIN  |   Published on : 28th March 2019 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி தில்லைநகர் பகுதியில் ரூ.10 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் வருமானவரித் துறையினர் புதன்கிழமை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில்  ரொக்கம் ஏதும் கைப்பற்றப்படவில்லை.
    திருச்சி கோட்டாட்சியரிடமிருந்து  வந்த தகவலின் பேரில், தில்லைநகர் 11 ஆவது குறுக்குச்சாலை மேற்குப் பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 கோடி ரொக்கம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும்  தேர்தல் பறக்கும்படையினருக்கு உத்தரவிடப்பட்டது.
    இதன் பேரில், தேர்தல் பறக்கும்படை வட்டாட்சியர் ரங்கராஜன் தலைமையில் 3  குழுவினர் மற்றும் வருமானவரித் துறை ஆய்வாளர் தலைமையிலான 10-க்கும் மேற்பட்டோர் தில்லைநகரிலுள்ள அந்த நிதி நிறுவனத்தில் புதன்கிழமை பிற்பகல் 12 மணிக்கு சோதனையைத் தொடங்கினர்.பிற்பகல் 3.30 மணி வரை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்ட நிலையில் எந்தவித ரொக்கமும் கைப்பற்றப்படவில்லை. தொடர்ந்து அருகாமையிலுள்ள வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், ரொக்கமோ  அல்லது வேறு எந்தவித பொருள்களும் சிக்கவில்லை. இதன் பின்னரே பறக்கும்படை அதிகாரிகளும், வருமானவரித் துறை அதிகாரிகளும் அந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai