Enable Javscript for better performance
திருச்சி என்.ஐ.டி.மாணவர்கள் ஐரோப்பா பயணம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி தேசியத் தொழில்நுட்பக்கழகப் பேராசிரியர் மற்றும் இரு மாணவர்கள், ஐரோப்பாவில் நடைபெறும்  தொழில் நுட்பப்பேரவை கருத்தரங்கில் பங்கேற்க வியாழக்கிழமை செல்லவுள்ளனர்.
     ஐரோப்பாவில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை மின்காந்த அலை அனுப்பி குறித்த கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில், திருச்சி தேசியத்  தொழில்நுட்பக் கழகத்தின்  பேராசிரியர் ராகவன், மாணவர் அரவிந்து குமார், மாணவி திவ்யா சதுர்வேதி பங்கேற்று, மின்காந்த அலை அனுப்பி (ஆண்டெனா) குறித்த ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்கின்றனர். ஐரோப்பிய ஆண்டெனா பேரவையின் அழைப்பின்பேரில் இந்தியாவிலிருந்து பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட 7 பேரில் இவர்கள் மூவரும் அடங்குவர்.  கருத்தரங்கில் பங்கேற்கும் பேராசிரியர், மாணவ, மாணவியை  என்.ஐ.டி. இயக்குநர் மினி ஷாஜி தாமஸ், துறைத் தலைவர் லட்சுமி நாராயணன், பதிவாளர் பழனிவேல் உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai