Enable Javscript for better performance
பால்கோவா தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.6.42 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    பால்கோவா தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.6.42 லட்சம் திருட்டு

    By DIN  |   Published on : 28th March 2019 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துறையூர் அருகே பால்கோவா தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.6.42 லட்சம் திருட்டு போனது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    திருச்சி அண்ணாமலைநகரைச் சேர்ந்த ராமநாதன் மகன்கள் ஆனந்தன் (45), ஸ்ரீகாந்த் (43).  இவர்கள் இருவரும் துறையூர் அருகிலுள்ள ஒக்கரையில் பால்கோவா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். இங்கு 25-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
     பணியாளர்கள் தரும் வசூல் தொகையைப் பெற்று, வரவு- செலவு கணக்குகளைப் பார்த்துவிட்டு, ஆனந்தன் அங்கேயே தங்குவது வழக்கம்.  அவர் இல்லாத போது நாகம்மாள் (55) என்ற பணியாளர் அப்பணியை மேற்கொள்வார். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு ரூ.6.42 லட்சம் வசூல் பணத்தை நாகம்மாள் வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு உறங்கச் சென்றாராம். செவ்வாய்க்கிழமை காலை பார்த்த போது, பணம்  காணவில்லையாம். இதுகுறித்து உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் ஆனந்தன் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீஸார், நாகம்மாளிடம் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai