Enable Javscript for better performance
பொதுப் பார்வையாளர்  திருச்சி வருகை- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி மக்களவைத் தொகுதிக்கு, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட  பொதுப் பார்வையாளர் புதன்கிழமை வந்து பணிகளைத் தொடங்கினார்.
    தேர்தலுக்காக ஏற்கெனவே 2 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில்,  திருச்சி தொகுதிக்கு சத்தீஸ்கர் மாநில ஐஏஎஸ் அதிகாரி அமித்குமார் பொதுப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    புதன்கிழமை திருச்சி வந்த இவர், ஆட்சியரகத்தில் நடைபெற்ற வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் பங்கேற்று, வேட்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 
    தொடர்ந்து, ஆட்சியரகத் தரைத்தளத்திலுள்ள ஊடக மையத்தை பார்வையிட்ட அமித்குமார்,  அரசியல் கட்சிகளின் பிரசாரங்களுக்கு அனுமதியளித்தல், வாகனங்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் பணி மையத்தையும் பார்வையிட்டு, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
     திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள பார்வையாளரிடம்,  தேர்தல் தொடர்பான புகார்கள் இருந்தால்  தினமும் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நேரடியாக சந்தித்து தெரிவிக்கலாம். மேலும்,  0431-2318677, செல்லிடபேசி 93852-28902 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். 
    திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளிலும் பொதுப் பார்வையாளர் ஆய்வு மேற்கொள்கிறார். 
    எனவே, 6 பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், வாக்காளர்கள், பொதுமக்கள் அனைவரும் தொடர்பு கொள்ளலாம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai