Enable Javscript for better performance
மக்களவைத் தேர்தல்: திருச்சி தொகுதியில் 28 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தல்: திருச்சி தொகுதியில் 28 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

    By DIN  |   Published on : 28th March 2019 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 28 பேரது மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.  6 சுயேச்சைகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
    கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனுதாக்கல் செவ்வாய்க்கிழமையுடன்  நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை,  திருச்சி தொகுதிக்கான பொது தேர்தல் பார்வையாளர் அமித்குமார் முன்னிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு தலைமையில்  நடைபெற்றது.
    இதில்  தேமுதிக வேட்பாளர் வி. இளங்கோவன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வி. ஆனந்தராஜா, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வி. வினோத், மற்றும் பல்வேறு கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள், வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.
     37 வேட்பாளர்களின் மனுக்கள்  வரிசைப்படி அழைக்கப்பட்டு அவர்களது மனு மீது பரிசீலனை நடைபெற்றது. இதில், காங்கிரஸ்  வேட்பாளர் சு. திருநாவுக்கரசர், தேமுதிக வேட்பாளர் வி. இளங்கோவன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் சாருபாலா ஆர். தொண்டைமான், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வி. ஆனந்தராஜா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி. வினோத், பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் எஸ். பாலமுருகன் உள்ளிட்ட 28 வேட்பாளர்களது வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
    போதிய ஆவணங்களின்றி தாக்கல் செய்யப்பட்டிருந்த சுயேச்சை வேட்பாளர்களான க. முருகானந்தம், ஆர். மாயக்கண்ணன், வி. ரமணி, என். சந்தோஷ்குமார், எ.ஆர். இளங்கோவன், ப.ராஜேந்திரன் ஆகிய 6 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும், பிரதான கட்சிகளில் மாற்று வேட்பாளராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 3 பேரின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுவைத் திரும்பப் பெற வெள்ளிக்கிழமை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்று மாலையே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.  அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குதவது தொடர்பாக வெள்ளிக்கிழமை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

        

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai