Enable Javscript for better performance
ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு பேரிடர் மீட்புப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு பேரிடர் மீட்புப் பயிற்சி

    By DIN  |   Published on : 28th March 2019 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சியில் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கான பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி நிறைவு புதன்கிழமை நடைபெற்றது.
    பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து, ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கான பயிற்சி திருச்சி காஜாமலை கிம்பர்கார்டனிலுள்ளபயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
    திருச்சி, சென்னை, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் பங்கேற்றனர். 
    பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் முறை, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai