Enable Javscript for better performance
விமான நிலையத்தில் ரூ.14.80 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    விமான நிலையத்தில் ரூ.14.80 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

    By DIN  |   Published on : 28th March 2019 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.14.80 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
    இலங்கை தலைநகர்,கொழும்புவிலிருந்து புதன்கிழமை பிற்பகல் திருச்சி வந்த விமானத்தில் பயணித்த பயணிகளையும், உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
     சோதனையில், ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  விசாரணையில் அவர், இலங்கையைச் சேர்ந்த சவரிமுத்து அந்தோனி செபஸ்தியான்என்பதும் ,  தனது உடலுக்குள் (ஆசனவாய் வழியாக) பசைவடிவில் தங்கத்தை உருமாற்றி வைத்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
    இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு உரிய சிகிச்சை அளித்து தங்கம் வெளியே எடுக்கப்பட்டது. அவர் கொண்டு வந்திருந்த தங்கம் பசைவடிவில் 664 கிராம் இருந்தது. பின்னர் அதனை கட்டியாக உருக்கினர். தொடர்ந்து சவரிமுத்து அந்தோனி செபஸ்தியானிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவற்றின் மதிப்பு ரூ.14.80 லட்சமாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai