Enable Javscript for better performance
ஸ்ரீரங்கம் கோயிலில் ரூ.42.26 லட்சம் உண்டியல் காணிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.42.26 லட்சம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இக்கோயிலின் பல்வேறு சன்னதிகளில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, மார்ச் மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயிலின் கருடாழ்வார் சன்னதி முன்பு புதன்கிழமை நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில், ரூ.42.26 லட்சம் ரொக்கம், 187 கிராம் தங்கம், 768 கிராம் வெள்ளி, 590 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்தன. கடந்த மாதத்தைக் காட்டிலும் இந்த மாதத்தில்ரூ.8 லட்சம் குறைவாகக் கிடைத்துள்ளது.  உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில்,  ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதி, ஐயப்ப சேவா சங்கத்தினர், கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai