மாணவர்களின் ஒழுக்கம்தான் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும்
By DIN | Published On : 28th March 2019 07:51 AM | Last Updated : 28th March 2019 07:51 AM | அ+அ அ- |

மாணவர்களது ஒழுக்கம்தான் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் என்றார் மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பாஸ்கரன்.
திருச்சி துவாக்குடியிலுள்ள அரசுக் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற 17 ஆவது பட்டமளிப்பு விழாவில், 503 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி மேலும் அவர் பேசியது:
மாணவர்களுக்கு ஒழுக்கம்தான் முக்கியம். அதுதான் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும், தோல்வியைக் கண்டு துவளாமல் தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம். இளைஞர்கள் தங்களது வாழ்வில் வளம்பெற, நமது முன்னோர்கள் கூறிய சில நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதாவது, வறுமையில் நேர்மை மற்றும் உதவி, கோபத்தில் பொறுமை, தோல்வியில் விடா முயற்சி, செல்வத்திலும் எளிமை உள்ளிட்ட குணங்களை பின்பற்றும் நிலையில் நிச்சயம் நிலையான வாழ்வு கிடைக்கும் என்றார் பாஸ்கரன்.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் மணிமேகலாதேவி தலைமை வகித்தார். பேராசிரியர் பி. டேவிட் லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர், துறைத் தலைவர்கள் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...